ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிவரும் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இன்று இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து போராட்டம் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையைச் சுற்றி, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போன்று மீண்டும் ஒரு போரட்டப் புரட்சி நிகழ்ந்து விடக் கூடாது என தமிழக அரசு இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.