சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கணவர் நடராஜனைச் சந்திப்பதற்காக 5 நாள் பரோலில் சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தார். நேற்றுடன் 5 நாட்கள் பரோல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார். சரியாக மாலை 4.30 மணி அளவில் சிறையை அடைந்தார்.