சென்னையில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் ஆதித்யராம் குழுமம், கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் தென்னிந்தியாவில் முதல் முறையாக ‘ஆதித்யராம் பேலஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட அரண்மனையை திறந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆதித்யராம் அரண்மனை நகரம் என்ற பெயரில் அரண்மனை போன்ற வடிவமைப்பு கொண்ட வில்லாக்களை இக்குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவின் கீழ் கட்ட இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சியானது இப்பகுதியில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் கட்டிடக்கலைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும். புதிய அரண்மனை திறப்பு விழா ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆதித்யராம், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆதித்யராம் குழுமத்தால் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அரண்மனை – இந்நிறுவனத்தின் கட்டிடக்கலைக்கு தலைசிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும் இது இந்நிறுவனத்தின் நேர்த்தியான வடிமைப்பிற்கான அடையாளச் சின்னமாக திகழ்கிறது. அழகிய சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தென்னிந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் சமகால வடிவமைப்பை பிரதிபலிக்கிறது. பரந்து விரிந்த தோட்டங்கள், மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், இந்த அரண்மனை ஆடம்பர வாழ்க்கைக்கான சிறந்த உத்தரவாதத்தை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் தென்னிந்தியாவில் முதல் முறையாக அரண்மனை வடிவிலான வில்லாக்களை கட்ட திட்டமிட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக கட்டப்பட உள்ள இந்த வில்லாக்கள் அதிநவீன வசதிகளை விரும்பும் வீட்டு உரிமையாளர்களுக்கு அரச வாழ்க்கையின் ஆடம்பரத்தை கொண்டு வரும். ஒவ்வொரு வில்லாவும் அலங்கரிக்கப்பட்ட முகப்புகள், கம்பீரமான முற்றங்கள் மற்றும் நுணுக்கமான உட்புறங்களைக் கொண்டிருக்கும். இந்த வில்லாக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ராஜாக்கள் மற்றும் ராணிகள் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்களோ அதைப் போல வாழ்க்கையை ஆடம்பரமாக அனுபவிக்கலாம்.
இந்த திட்டம் குறித்து ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆதித்யராம் கூறுகையில், தென்னிந்தியாவின் மிகப்பெரிய அரண்மனை மற்றும் முதல் அரண்மனை வடிவிலான வில்லாக்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆடம்பரம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளை மறுவரையறை செய்யும் அடையாளச்
சின்னங்களை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இதுபோன்ற ஆடம்பர கட்டுமானத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேறு எங்கும் இல்லாத ஒரு அரச வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.