ரயில்வேயில் ஆதார் அடிப்படையிலான  வருகைப்பதிவு

இந்திய ரயில்வே, தனது ஊழியர்களுக்கு புதிய வருகைப்பதிவேடு முறையை கொண்டு வந்துள்ளது. ரயில்வே துறையில் ஊழியர்கள் வேலைக்கு தாமதமாக வருவதாக சில புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும், சில நிர்வாக சீர்கேடுகளும் ஏற்படுவதாக கருதப்பட்டது. எனவே ரயில்வேயில் ஊழியர்கள் சரியான நேரத்திற்க்கு பணிக்கு வரும் பொருட்டு ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. ஊழியர்களின் கைரேகை மற்றும் கருவிழிப்படலம் உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். 

இதன்படி சில ரயில்வே தலைமையகங்களில் இந்த முறையில் வருகைப்பதிவு செய்வது தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 30ம் தேதிக்குள் அனைத்து ரயில்வே மண்டல தலைமையகங்கள், ரயில்பெட்டி தொழிற்சாலை, ரயில்வே பணிமனை, கொல்கத்தா மெட்ரோ உள்ளிட்டவற்றில் இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது.  அதைத்தொடர்ந்து மற்ற ரயில்வே மண்டலங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில்  ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறை கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.