ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் “அடங்காதே” – டப்பிங் இன்று துவங்கியது
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”.
நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“அடங்காதே” படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கப்பட்டு துரிதமாத நடைபெற்று வருகிறது.
அடங்காதே திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் வந்துள்ளாதாக தயாரிப்பாளர் M.S.சரவணன் கூறியுள்ளார்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியிடு மற்றும் பட வெளியிடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
இயக்கம் – சண்முகம் முத்துசாமி
தயாரிப்பு – M.S.சரவணன்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – PK வர்மா
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
சண்டைபயிற்சி – திலிப் சுப்பராயன்
நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – M.செந்தில்
நிர்வாக தயாரிப்பு – M.சுரேஷ் ராஜா, அருண் புருஷோத்தமன், T.ரகுநாதன்