பாக்சிங் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தும் நடிகை

முன்னணி கதாநாயகர்களுடன் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷா உடற் பயிற்சியில் எப்போதுமே தனி கவனம் செலுத்திவருவார். அந்த வகையில் தற்காப்பு கலையான பாக்சிங் பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய பாக்சிங் பயிற்சி வீடியோவை நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

மேலும், பாக்சிங்கை ‘my current love’ எனவும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘நீ என்னை அடிக்கும் படி கனவு கண்டால் கூட, விழிக்கும்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தான் எழுவாய்.. நான் அவ்வளவு பலசாலியானவள்’ எனப் பதிவிட்டுள்ளார்