“தாதா 87” படத்தால் ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டுகள்

 
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.
பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.
“தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.