இன்றைய ஃபேஷன் உலகில் இளம்பெண்களும், மணப்பெண்களும் விரும்பி உச்சரிக்கும் வார்த்தை டயாடெம். இந்த நிறுவனத்தின் புதிய விற்பனையகம் சென்னை அண்ணா நகரில்உள்ள வி ஆர் மாலில் திறக்கப்படவிருக்கிறது. இதனையொட்டி டயாடெம் நிறுவனத்தின் புதிய டிசைனில்வடிவமைக்கப்பட்ட உடைகளை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் மெட்ராஸ் படப்புகழ் மற்றும் பிக்பாஸ்சீஸன்=2டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் நடிகை மனிஷா ஸ்ரீ, இயக்குநர் பா ரஞ்சித்தின் மனைவி திருமதி அனிதா ரஞ்சித், மெட்ராஸ் மற்றும் கபாலி படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி, மாரி=2 படத்தின் கலை இயக்குநர் அமரன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஆகியோர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அத்துடன் டயாடெம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும், ஆடை வடிவமைப்பாளருமான திருமதி ஷைனி சிண்ட்ரெல்லா அஸ்வின், ஆச்சி நிறுவனத் தலைவர் திரு பத்ம சிங் ஐசக் உள்ளிட்டஏராளமானவர்கள்கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமதி ஷைனி பேசுகையில்,“இந்திய திருமணங்களில் ஆண்கள் மட்டும் மேற்கத்திய கலாச்சார உடையான கோட் சூட்டை அணியும் பொழுது,அதற்கு பொருத்தமான கவுன் என்ற மேற்கத்திய கலாச்சார ஆடையை பெண்கள் அணியாமல், புடவைகளையும், லெஹங்காவையும் அணிந்திருப்பது பொருத்தமற்றதாக தோன்றியது. அதனால் திருமண ஆடையான கவுன் ஆடையை பிரபலப்படுத்தவேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் இந்திய கலாச்சாரச் சூழலில் கவுனை எப்படி திருமணத்திற்கான ஆடையாக மாற்றுவது என்று எண்ணி, அதன் வடிவமைப்பில் விசேடமாக கவனம் செலுத்தி புதுமையான வகையில் வடிவமைத்தேன். அதனை விளம்பரப்படுத்துவதற்காக நடிகை ரித்விகாவைதொடர்பு கொண்ட போது அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
ரித்விகாவின் இந்திய முகம் இத்தகைய ஆடைகளை உலகளவிலும், இந்திய அளவிலும் பிரபலப்படுத்தும் என்று நம்பினோம். எங்களின் நம்பிக்கையை நடிகை ரித்விகாவும், புகைப்பட கலைஞர் ஜோஷ்வாவும் நிரூபித்துள்ளனர்.திருமணம் ,பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற நவநாகரிக ஆடை அணிகலன்கள் அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும் வகையில் டயாடெம் (DIADEM ) உள்ளது .
நடிகை ரித்விகாவை டயாடெம் பேரிடால் ஆடைகளால் அலங்கரித்தபோது தேவதை போல காட்சியளித்தார் .அந்த அழகான தருணங்களை பாலிவுட்டின் பிரபல புகைப்பட கலை ர் ஜோவே பதிவு செய்தார் .இந்த கதையில் இந்திய இளவரசி ,பக்கிங்கமின் இளவரசி மற்றும் கனவுலகத்தின் இளவரசி ஆகிய மூன்று கருப்பொருள்கள் காட்சியெடுக்கப்பட்டது .
இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து புதிய மாடல் கவுன்களில் ரித்விகா தேவதை போலவும், இந்திய இளவரசி போலவும் தோன்றுகிறார்.எங்களின் டயாடெம் நிறுவன ஆடைகளுக்கு புதிய வணிக முகம் கொடுத்திருக்கும் நடிகை ரித்விகாவை பாராட்டுகிறேன்.” என்றார்.
திருமதி அனிதா ரஞ்சித் பேசுகையில்,“எனக்கு கவுன்அணிவது பிடிக்கும். வரும் காலத்தில் திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற சுபநிகழ்வுகளில் டயாடெம் வடிவமைக்கும் கவுன் அணிந்து கொள்ள விரும்புகிறேன்.”என்றார்.
நடிகை ரித்விகா பேசுகையில்,“ஜோஷ்வா போட்டோஷுட் இருக்கிறது என்று சொன்னார். அதன் பிறகு ஷைனி அவர்களை சந்தித்தேன். அவர்களிடம் என்னுடைய உடல்மொழிக்கு மேற்கத்திய கலாச்சார ஆடையான கவுன் பொருத்தமாக இருக்குமா?என்று கேட்டேன். அதன்பிறகுஅவரின் வடிவமைப்பை பார்த்து பிரமித்தேன். அதன்பிறகு அதனை அணிந்து புகைப்படத்திற்காக ஒத்துழைப்பு கொடுத்தேன்.
ஒரு நாள் தான் ஷுட்நடந்தது. ஆறு விதமான நவீன உடையை அணிந்தேன். அணிந்து நடித்த ஆறு உடைகளிலும் நான் உண்மையிலேயே தேவதையாகவும், இளவரசியாக கம்பீரமாகவும், கண்ணியமாகவும் தோன்றியதை கண்டு வியப்புற்றேன். டிசைனரான திருமதி ஷைனியை கைகுலுக்கி பாராட்டுதெரிவித்தேன். டயாடெம் டிசைனர் கவுன் அணிந்து நான் தோன்றுவதை பெருமிதமாக கருதுகிறேன்.அதன் விளம்பர தூதுவராக இருப்பதையும்கௌரவமாக நினைக்கிறேன்.” என்றார்.
திருமதி டெல்மா பதம்சிங்ஐசக் பேசுகையில்,“நாங்கள் திருமணத்திற்காக கவுன் உடையை தேடினோம். தமிழகத்தில் எங்குமே நாங்கள் நினைத்த டிசைனில் கிடைக்கவில்லை. அதனால் இத்தகைய நவீன உடைகளை நாமே டிசைன் செய்து ஏன் விற்பனை செய்யக்கூடாது என்று எண்ணினோம். ஃபேஷன் டிசைனில் ஆர்வம் கொண்டஷைனியிடம்இது குறித்து பேசினேன். அவர் தான் ‘டயாடெம்’என்ற பிராண்ட்டை உருவாக்கி, இதனை செயல்படுத்தினார்.எங்களுடைய டயாடெம் விற்பனையகத்தில் அனைத்து வயதினருக்கு ஏற்ற திருமணம் மற்றும்பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கான புதிய டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் நியாயமான விலையில் கிடைக்கிறது. அனைவரும் வருகை தந்து, தங்கள் குழந்தைகளை தேவதைகளைப் போன்றும், இளவரசிபோன்றும் ஆடைகளால்அலங்கரித்துக் கொண்டுஉற்சாகமடையவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன்.” என்றார்