தங்கையையும் சினிமாவில் களம் இறக்குகிறார் நடிகை அஞ்சலி

கற்றது தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தெலுங்குப் பெண்ணான அஞ்சலி. பிறகு அங்காடி தெருவில் பிரபலமானர். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் அஞ்சலி நடித்து வந்தார். இடையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தெலுங்கு படங்களில் நடிக்க போனார்.

தெலுங்கில் அவரின் முதல் படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவே அங்கேயே தங்கினார்.  இப்போது, நடிகை அஞ்சலி தனது இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார். இழந்த மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது தமிழில் பேரன்பு, காளி ஆகிய படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி, தனது தங்கை ஆரத்யாவை சினிமாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளார். அஞ்சலியின் தங்கை ஆரத்யா, தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

தொடர்ந்து தமிழ் பட உலகத்துக்கும் வர இருக்கிறார். அக்கா மாதிரி ஹோம்லி ரூட்டில் போகாமல், ஆரத்யா கிளாமர் ரூட்டில் போக இருக்கிறாராம். சீக்கிரமே ஆரத்யா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.