நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்,ஏ.,க்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? வேலைக்கு செல்லவில்லை என்றால் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானா?
என்றும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி கேட்டுள்ளார். தமிழக அரசு குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.