நடிகர் அருள்நிதி & இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.
நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர் அருள்நிதியை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றுகிறார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது. டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இப்போது இருவரும் ‘டிமான்டி காலனி 2’ மூலம் அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்க மீண்டும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நேரங்களில், திரைப்படத் துறையில் பெரும்பாலான இரண்டாம் பாகங்கள் இயக்குனர்-நடிகர் என இருவரின் முன்முயற்சியால் நிகழ்கின்றன. இருப்பினும், டிமான்டி காலனி திரைப்படத்தில் வினோதமாக, முதல் பாகத்தில் அது உருவாக்கிய மாயாஜாலத்தின் தொடர்ச்சியை வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் மீண்டும் பார்க்க விரும்புகின்றனர். படம் வெளியாகி (#7yrsOfDemonteColony) ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அருள்நிதி-அஜய் ஞானமுத்து ஜோடி, படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டே காலனி 2 ’யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது…
“டிமான்டி காலனி திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று மற்றும் படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்