ஜூலை 1ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதனால் இந்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக. கலால் மற்றும் சுங்கத்துறை, நடிகர் அமிதாப் பச்சனை விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் 40 வினாடிகள் தோன்றி உரையாற்றும் வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.