மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்

குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது…  சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது…
 
அதிகாரிகளின்  அலட்சியத்தால் பலியாகிய  மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது…
 
 மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்… வழியில் என்னால் இயன்ற  தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு       சென்றேன்….
 
அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது  காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை  கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்…
 
அதேநேரம் சுசீந்தரம்  பகுதியில் உள்ள  ஒருகிராமத்தில் ஒரு பகுதியின் மக்கள் உணவு தணீரின்றி தவிப்பதாகவும் இதுவரை எந்த அரசியல்வாதிகளா அதிகாரிகளோ மீடியாக்களோ தொண்டு நிறுவனங்களோ காலை வைக்காத பகுதி என நண்பர் பிரபு மூலம் தகவல் கிடைக்க… உடனடயாக பயணமானோம்… 
 
அநத பகுதிக்கு செல்ல முடியாதவாறு சாலை துண்டாகியிருந்ததே காரணம்… நவடந்து சென்ற போது அந்த குழந்தைகளின் பசிகதறலை தாண்டி  பெண்கள மற்றும்பெரியவர்ளின்  பசியின் வலியை வார்த்தையால் டகேட்க முடிந்தது.  உடனடியாக  கொண்டு சென்ற 
 
 பிஸ்கட்கள்
பிரட் 
ஜாம்
பழங்கள்
தண்ணீர்
குளுக்கோஸ்
ரஸ்க்
உலர்திராட்சை
பருப்புகள் 
 
 வழங்கிய நொடியிலே உண்டபோது அவர்களின் வேதனை உணர முடிந்தது… பின் அவர்களிடம் விவரம் கேட்டறிந்தபோது  கண்துடைப்பாக நான்கு  நாட்கள் முகாமில் வைக்கப்பட்டு திருப்பி கட்டாய படுத்தி அனுப்பபட்டதாகவும் தணீரின்றி ஒரு நாளாக தவிப்பதாகவும் கதறினர்… உடனே புதியதலைமுறை நிருபர் அன்பு அண்ணன்  நாகராஜ் அவரகளை தொடர்புகொண்டு தகவலித்தபோது பத்து நிமிடத்தில் கேமராவோடு வந்து சேர்ந்தார்… அனைவரிடமு் குறைகளை  கோரிககைகளை பதிவு செய்தார்….
இந்த தெருவில் இருபத்தி எட்டு வீடுகளில் எட்டு வீடுகள் ஒகியால் இடிந்து தரைமட்டமானது… பன்னிரு வீடுகள் சேதமாகியுள்ளது…. அனைவரும் நடுத்தெருவில் குழந்ளைகளுடன் இரவு தூங்கியுள்ளர்… வயது பெண்களின் அவஸ்தை சொல்ல முடியால் கண்ணீேராடு  ஒதுங்கி நின்றனர்… மூன்று குடும்பத்தினர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்…..
தரைமட்டமான வீடுகளில் எதையோ  தேடியவர்களிடம் என்வென விசாரித்தபோது ஆதார்கார்டுஎனவும் அது இருந்தால் மட்டுமே முகாம் செல்ல முடியும் நிவாரணம் பெற முடியும் என கதறினர்…..
 
காரில் உள்ள நிவாரண பொருட்களளை நண்பர் பிரபு மற்ளும மக்கள உதவியுடன் தூக்கி சென்று அனைவருக்கம் பகிர்ந்தளித்தாம்…
 
போர்வை 
துண்டு
சேலை
வேஷ்டி
 
பற்பசை
சோப்பு
விக்ஸ்
மருந்துகள்
பெண்கள் நாப்கின்
குழந்தைகள் நாப்கின்
 
அரிசி
பருப்பு
கோதுமை மாவு
சர்க்கரை
உப்பு
மைதாமாவு அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்ட்டது. மேலும் அவசரநிவாரண நிதி தலா மருத்துவ செலவுகளுக்காக ஆயிரம் ரூபாய்  வழங்கப்பட்டது