ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில், ராமலிங்கம் தயாரிப்பில், ரவி முருகையா இயக்கத்தில், விதார்த், சரவணன், அருந்ததி நாயர், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், வெர்டிகல் ராஜா, செம்மலர் அன்னம், பவுன்ராஜ், ஜிந்தா, கர்ண ராஜா, ஜிந்தா கோபி , ரிந்து ரவி, தமிழ் செல்வி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஆயிரம் பொற்காசுகள்.

தஞ்சாவூரில் இருக்கும் குருவாடிப்பட்டி கிராமத்தில் வேலைக்கும் எதற்கும் செல்லாமல் பக்கத்து வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி எல்லாவற்றையும் திருடி சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்.

இப்படி சோம்பேறியாக இருக்கும் சரவணனிடம் அவரின் தங்கை தன் மகன் விதார்த் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வெட்டியாக வீட்டில் இருக்கிறார் என்றும், சொன்ன பேச்சை கேட்காமல் இருக்கிறார் என்றும், சொல்லி கொஞ்ச நாள் சரவணனிடம் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார்.

சரவணனும், விதார்த்தும் சேர்ந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டுகிறார்கள். ஆனால், அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் கிடைக்கிறது. அந்த புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த விஷயத்தை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள்.

இப்படி பங்கு கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக்கிக் கொண்டு போகிறது. கடைசியில், அந்த பொற்காசுகள் சரவணன், விதாத்துக்கும் மட்டும் கிடைத்ததா? இல்லை வேறு யாருக்கெல்லாம் கிடைத்தது என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து சொல்லியிருப்பது தான் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : பானு முருகன்
இசை : ஜோஹன் சிவனேஷ்
எடிட்டிங் : ராம் மற்றும் சதீஷ்
கலை : சண்முகம்
சண்டை பயிற்சி : ஃபையர் கார்த்திக்
நடனம் : அசோக் ராஜா
ஒலி : சதீஷ்
ஒப்பனை : மணி
பாடல்கள் : கபிலன், நந்தலாலா, தனிக்கொடி, முத்துவேல், ரவி முருகையா
தயாரிப்பு மேலாளர் : லோகநாதன்
டைரக்ஷன் டீம் : கே பிரபாகரன், நாகேந்திரன் வேலுசாமி, சுரேஷ் செல்லையா, வி.கே.குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்