ஆரியன் விமர்சனம் ⭐⭐⭐⭐

பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி, கருணாகரன், அவினாஷ், ஜெயக்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆரியன்.

பிரபல தொலைக்காட்சியில், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சி ஒன்றில் டாப் நடிகர் ஒருவரை பேட்டி காணுகிறார் நிருபராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அப்பொழுது அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கியை எடுத்து நாயகனை குறி வைத்து அங்குள்ள அனைவரையும் பிணைய கைதிகளாக்குகிறார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவரிடம் கேட்கப்படும் பொழுது அடுத்தடுத்து நாட்களில் ஐந்து பேர் ஒவ்வொருவராக கொள்ளப்படுவார்கள் முடிந்தால் தடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இறந்து போன ஒரு மனிதர் எப்படி அடுத்தடுத்த கொலைகளை செய்வார் என்றும், செல்வராகவனின் மிரட்டல் குறித்தும் விசாரிக்க வருகிறார் காவல் துறை அதிகாரியான விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு எதற்காக செல்வராகவன் அப்படி செய்தார், அப்படி சொல்கிறார் என்று விசாரணை நடத்தப்படுகிறது. அந்த விசாரணையில் தெரியவரும் தகவல்கள் இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

காவல் துறை அதிகாரியாக அந்த சீருடையில் சிறப்பான தோற்றத்துடன் வரும் விஷ்ணு விஷாலும், வில்லனாக நடித்து இருக்கும் செல்வராகவனும், நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை கொடுத்து படத்திற்கு மெருகேற்றி இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், சுபபாரா, ஆரியன் ரமேஷ், இயக்கம் : பிரவீன் கே
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன்
மக்கள் தொடர்பு : சதீஷ்(AIM)

ரேட்டிங் ⭐⭐⭐⭐