ஆரோமலே விமர்சனம்

சரங் தியாகு இயக்கத்தில், கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், விடிவி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆரோமலே.

பள்ளி படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள் கிஷன் தாசும், ஹர்ஷத் காணும்.  பள்ளியில் ஏற்பட்ட காதல், கல்லூரியில் ஏற்பட்ட காதல் எதுவுமே சேராமல் இருக்கிறது கிஷன் தாஸுக்கு.

காதலில் தோல்வி அடைந்து கொண்டே இருக்கும் கிஷன்தாஸ் அப்பா செல்லும் வேலைக்கு போக ஆரம்பிக்கிறார். 

அவர் வேலைக்கு சேருமிடம் திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் அலுவலகம். அங்கு அவருக்கு சீனியர் மேனேஜராக இருக்கிறார் ஷிவாத்மிகா.

கிஷன் தாஸ் சேர்ந்த நாளில் இருந்தே அவர்கள் இவர்களுக்கும் இடையே மோதல் ஆரம்பிக்கிறது. அந்த மோதல் கொஞ்ச நாட்களில் நட்பாக மாறி அதன் பிறகு காதலாக மாறுகிறது. இந்த காதலாவது கிருஷ்ணன் தாஸுக்கு கை கூடியதா இல்லையா என்பதே ஆரோமலே படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார் 

இயக்கம் : சரங் தியாகு 

ஒளிப்பதிவு : கௌதம் ராஜேந்திரன் 

இசை : சித்து குமார் 

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது