ஆர்யமாலா விமர்சனம்

வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்) தயாரிப்பில், R.S. விஜய பாலா இயக்கத்தில், ஆர் .எஸ் . கார்த்திக், மனிஷாஜித், எலிசபெத், சிவசங்கர், ஜேம்ஸ் யுவன், தவசி, மணிமேகலை, ஜாபர், வேல்முருகன், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆர்யமாலா.

1982-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா.

கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் அப்பா அம்மா மற்றும் தங்கையுடன் வசிக்கும் நாயகி மனிஷா ஜித்தின் கனவில் வருகிறார் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்.

கனவில் கண்ட ஆர்.எஸ்.கார்த்திக். தெருக்கூத்து கலைஞராக, கோவில் திருவிழாவில் தெருக்கூத்து போடுவதற்காக நாயகி மனிஷா ஜித்தின்
கிராமத்திற்கு வருகிறார்.

கனவில் வந்தவரை நேரில் பார்த்ததும் சந்தோஷபடும் மனிஷாஜித் தன் காதலை கண்கள் மூலமாக வெளிப்படுத்த, அதனை புரிந்து கொள்ளும் ஆர்.எஸ்.கார்த்திக்கும் அவரை காதலிக்க தொடங்குகிறார்.

ஒரு சமயத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் மனிஷாஜித்திடம் தன் காதலை வெளிப்படுத்தி விடுகிறார். ஆனால், மனிஷாஜித்தோ அவரின் காதலை நிராகரிப்பதோடு, மட்டுமல்லாமல் அவமானப்படுத்தி பேசி விடுகிறார்.

மனிஷாஜித்தின் இந்த செயலுக்கு காரணம் புரியாமல் மன வருத்தம் அடைகிறார்.

தெருக்கூத்தின் கடைசி நாளில் மனிஷாஜிதை சந்தித்து தனது காதல் பற்றி பேச முயற்சிக்கும் போது, மனிஷாஜித்தின் மாமா அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

மனிஷாஜிதை அவரின் மாமாவிடம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா?
கார்த்திக்கின் காதலை ஏற்றுக் கொண்டு இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ஆர்யமாலா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் (ஜனா ஜாய் மூவீஸ்)

ஒளிப்பதிவு : ஜெய்சங்கர் ராமலிங்கம்

இசை : செல்வநம்பி

திரைக்கதை, வசனம் , இணை இயக்கம் : R.S. விஜய பாலா

படத்தொகுப்பு : ஹரிஹரன்

கலை : சிவ யோகா

ஸ்டண்ட் : மிரட்டல் செல்வா , வீரா

நடனம் : தஸ்தா

ஆடை : சாவிஸ். S

நிழற்படம் : கார்த்திக் , ஜெயராம்

போஸ்டர் டிசைனிங் : செல்வா

VFX : விஜய் பாபா , P&P

கலரிஸ்ட் : கார்த்திக்
ஒலிப்பதிவு கூடம் : AVM G STUDIO – ஐயப்பன்

தயாரிப்பு மேற்பார்வை : ஹென்றி குமார்

மக்கள் தொடர்பு : KSK செல்வகுமார்