ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிப்பில், அருண்.கே.ஆர் இயக்கத்தில், மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா மனோகரன், ஸ்ரீரஞ்சனி, கலைராணி, யாசர் ஆகியோர் நடிப்பில் வெளவந்துள்ள படம் ஆரகன்.
அப்பா அம்மா இல்லாமல் விடுதியில் தங்கி இருக்கும் கவிப்ரியாவும், மைக்கேல் தங்கதுறையும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாயகி கவிப்பிரியா நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாயகன் மைக்கேல் தங்கதுரையிடம் கேட்கும் பொழுது நான் தொழில் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு 10 லட்சம் தேவை இப்பொழுது ஆறு லட்சம் இருக்கிறது, இன்னும் நான்கு லட்சம் சேர்த்து விட்டால் தொழில் ஆரம்பித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்.
கவிப்ரியா, மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் தனிமையில், நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு செல்ல கவிப்ரியா முடிவு செய்து, அதனை மைக்கேல் தங்கதுரையிடம் சொல்ல, இந்த சாதரணமான வேலைக்கு போய் இவ்வளவு சம்பளமா என்று சந்தேக பட்டு, கவிப்ரியாவை அங்கு செல்ல விடாமல் தடுக்கிறார், இருப்பினும் அதை கேட்காமல் அவர் அங்கு செல்கிறார்.
ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இருக்கும் அந்த வீடு மர்மமாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மமாகவே இருக்கிறது. முகம் பார்க்கும் கண்ணாடி கூட அங்கு இல்லை என்பது கூடுதல் மர்மம். செல்போன் டவரும் கிடைக்காது. எப்பொழுதாவது கிடைக்கும் சிக்னல் மூலம் காதலோனடு பேசி நாட்களை கழித்து வருகிறார்.
சில நாட்களில், செல்போனும் வேலை செய்யாமல் போக, காதலனுடன் பேச முடியாமல் போகிறது.
இப்படி பல விஷயங்கள் கவிப்பிரியாவிற்கு எதிராக நடக்கிறது. அது எதனால்? கவி பிரியாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? ஏன் இப்படி ஒரு இடத்தில் வந்து கவிப்பிரியா சிக்கிக்கொண்டார்? அங்கு இருக்கும் மர்மங்கள் என்ன என்பதே ஆரகன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஹரிஹரன் பஞ்சலிங்கம்
இயக்கம் : அருண்.கே.ஆர்
இசை : விவேக் மற்றும் ஜெஷ்வந்த்
மக்கள் தொடர்பு : A ஜான்