ஆலன் விமர்சனம்


வெற்றி, மதுரா, அனு சிதாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன், டிடோ வில்சன், ஸ்ரீ தேவா ஆகியோர் நடிப்பில் சிவா ஆர் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ஆலன்.

நாயகன் வெற்றி தன்னுடைய சிறிய வயதில் ஏற்படும் விபத்து ஒன்றில் தன்னுடைய குடும்பத்தை இழுந்து விடுகிறார். அது அவரை மிகவும் பாதித்து விடுகிறது, அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்கிறார்.

இருப்பினும் எழுத்தாளராக வேண்டும் என்பதே அவருடைய கனவாகவும் இருந்து வருகிறது.

ஒரு காலகட்டத்தில் ஒரு ஆங்கிலேய பெண் மதுராவுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாகவும் மாறுகிறது. அதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்.

அந்த பெண்ணுடன் பழகியதற்கு பிறகு எழுத்தில் ஆர்வம் காட்டி எழுது தொடங்குகிறார்.

அப்பொழுது மீண்டும் ஒரு துயர சம்பவத்தில் மாட்டிக் கொள்கிறார். அதனால் மிகுந்த மன வேதனையும் பாதிப்பும் அடைகிறார் வெற்றி. பிறகு மீண்டும் துறவியாகி அந்தப் பெண்ணின் பெயரிலேயே புத்தகங்களை எழுத ஆரம்பிக்கிறார்.

புத்தகங்களை எழுத ஆரம்பிக்கும் வெற்றி எப்படிப்பட்ட வாழ்க்கையை மீண்டும் வாழ்கிறார்? வாழ ஆரம்பிக்கிறார்? என்பதே ஆலன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : சிவா ஆர்
எழுத்து : சிவா ஆர்
ஒளிப்பதிவு : விந்தன் ஸ்டாலின்
இசை : மனோஜ் கிருஷ்ணா
படத்தொகுப்பு : மு காசி விஸ்வநாதன்
தயாரிப்பு நிறுவனம் : S3 Pictures
வெளியீடு : Creative Entertainers & Distributors
மக்கள் தொடர்பு : யுவராஜ்