ஆகக் கடவன விமர்சனம்

சாரா கலைக்கூடம் சார்பில், அனிதா லியோ – லியோ V ராஜா தயாரிப்பில், தர்மா இயக்கத்தில், ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் S , CR ராகுல், மைக்கேல் S , சதிஷ், ராமதாஸ், தஷ்ணா , ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆகக் கடவன”.

ஆதிரன் சுரேஷ், CR ராகுல் & ராஜசிவன் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். மூன்று பேரும் ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். தனியாக ஒரு மெடிக்கல் வைத்து தங்களுக்கான வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வின்சன்ட் சதீஷ் ராமதாஸ் மைக்கேல் இவர்கள் மூவரும் இளைஞர்களை கடத்தி வைத்து அவர்களை வைத்து பணம் திடுவதை ஒரு தொழிலாக செய்கின்றனர்.

புதிதாக ஒரு மெடிக்கல் ஆரம்பிப்பதற்கு பதிலாக தாங்கள் வேலை பார்க்கும் மெடிக்கலையே விலைக்கு வாங்குவதற்காக மூன்று பேரும் கடனாக 6 லட்சம் வாங்குகிறார்கள்.

அவர்கள் கடன் வாங்கிய இந்த ஆறு லட்சத்தையும் ஒருவன் திருடி சென்று விடுகிறான். ஆதிரன், சுரேஷ் நண்பர்களும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். விசாரணை பெரிதாக நடைபெறாமல் இருக்க விவசாய நிலத்தை விற்று அதன் மூலம் வருகிற பணத்தை தருவதாக ஆதியின் அப்பா சொல்கிறார். 

அதனால் அதை வாங்குவதற்காக ஆதிரனும் ராகுலும் கிராமத்திற்கு செல்கின்றனர். போகும் வழியில் வண்டி பஞ்சர் ஆகி விட அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பஞ்சர் கடைக்கு சென்று பஞ்சர் பார்க்க போகிறார்கள் இருவரும். 

சதீஷ் ராமதாஸ் வின்சென்ட் மைக்கேல் மூவரும் அங்கு இருக்கிறார்கள். பஞ்சர் கடையில் அடுத்தடுத்து வேலைகள் வருவதால் பஞ்சர் பார்க்க அதிக நேரம் ஆகி விடுகிறது.

ஆதிரையும் ராகுலையும் வின்சென்டும் அவர்களுடைய கூட்டாளிகளும் முறைத்துக் கொண்டு, எரிச்சலாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதிரன் நண்பர்களுக்கும் வின்சென்ட் கும்பலுக்கும் இடையே என்ன பிரச்சனை? சம்பந்தம் என்ன? ஆதிரனை இவர்கள் முறைப்பதற்கு காரணம் என்ன? என்பதே ஆகக் கடவன படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ – லியோ V ராஜா

இயக்கம் : தர்மா

இசை :  சாந்தன் அன்பழகன்

ஒளிப்பதிவு : லியோ வி ராஜ்

படத்தொகுப்பாளர் : சுமித் பாண்டியன் & பூமேஷ் தாஸ்

பாடலாசிரியர் : விக்கி

சண்டைபயிற்சி : தேசாய்

கலை இயக்குனர் : விஜயவீரன்

ஒளிக்கலவை : வினோத்குமார். A

ஒலி வடிவமைப்பு : A. சதிஷ்குமார்.

ஒலிக்கலவை : ராஜா நல்லைய்யா

மக்கள் தொடர்பு : ஆனந்த் எம் பி