தேர்ந்தெடுத்த படங்கள் செய்து ரசிகர்களை மகிழ்த்துவித்து வரும் ஆதி பின்ஷெட்டியின் நடிப்பில் உருவாகி வரும் படம் “க்ளாப்”. தடகள வீரனை மையமாக கொண்ட, ஸ்போர்ட்ஸ் டிரமாவாக உருவாகி வரும் “க்ளாப்” படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் 50லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பாடல்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு பற்றி இயக்குநர் பிருத்வி ஆதித்யா கூறியது….
எங்கள் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். தடகள விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பிரமாண்ட மக்கள் கூட்டத்துடன் படமாக்கப்படவுள்ளது.
தற்போது 50 லடசம் ரூபாய் செலவில் கலை இயக்குநர் வைரபாலனால் அமைக்கப்பட்ட அழகுமிகு பிரமாண்ட அரங்கில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான அற்புதமான நடனப் பாடலை படாமாக்கி வருகிறோம். நடிகை மோனல் கஜ்ஜார் பங்கு கொள்ளும் இப்பாடலில் ஆதியும் நடனமாடுகிறார். நடிகர் ஆதிக்கு தமிழைப்போல தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆதலால் “க்ளாப்” படத்தினை ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாக்கி வருகிறோம்.
Big Print Pictures சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தாயாரிக்கிறார். புதுமுக இயக்குநரான என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து பிரமாண்ட செலவில் இப்படத்தை தயாரிப்பது எனக்கு மிகுந்த பொறுப்புணர்வை தந்துள்ளது. எங்கள் படக்குழு இரண்டு மடங்கு உழைப்பை தந்து படத்தினை வெற்றி பெறச் செய்வோம்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஆதி பின்ஷெட்டியுடன் ஆகான்ஷா சிங், க்ரிஷா க்ரூப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். வில்லன் பாத்திரத்தில் நாசரும் படத்தின் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் பிரகாஷ் ராஜும் நடிக்கிறார்கள். காமெடி நடிகர் முனீஸ்காந்த் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “ஜீவி” ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ மண்ணின் மைந்தர்கள் புகழ் பிரவீன் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். P பிராபா பிரேம் , G. மனோஜ் மற்றும் G.ஶ்ரீ ஹர்ஷா இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள்.
Cast & Crew
Producer : IB Karthikeyan
Production Company : Big Print Pictures
Co-produced by : P.Prabha Prem, G. Manoj , G. Sri Harsha
Director : Prithvi Aditya
Starring : Aadhi Pinisetty, Akansha Singh, Krisha Kurup,Nassar,Prakash Raj,Munishkanth
Music Director : Isaignani Ilayaraja
cinematography : Praveen Kumar
Art director : Vairabalan