பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 260நாள்களில் 3800 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளும் பட்டதாரி பெண்

பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கான விழிப்புணர்வினை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒரு நடைபயணத்தினை தொடங்கியுள்ளார் நீயூடெல்லியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பெண் சிருஷ்டி பக்சி. நீயூடெல்லியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ லெப்டின் ஜெனரல் ஏ.கே.பக்சி, மற்றும் பள்ளி ஆசிரியர் சரக்கா ஆசிரியர் ஆகியோரின் மகள் தன் நீயூடெல்லியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பெண் சிருஷ்டி பக்சி.

சிறு வயது முதல் சமூக முன்னேற்றம், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் என்ன கொண்ட சிருஷ்டி, எம்.பி.ஏ. படித்து முடித்ததும் ஹாங்கங்கில் 1 ஆண்டு பணிபுரிந்துள்ளார். தன்னுடைய பணியை விட பெண்களின் முன்னேற்றம் குறித்தும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ண கொண்ட சிருஷ்டி தனது எண்ணத்தினை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் சம்மதம் கொடுத்ததை தொடர்ந்து, தனது பணியை உதறி தள்ளிவிட்டு, தனது நடைபயண முயற்சியை தொடங்கியுள்ளார். இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதிபடுத்துவது, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது, அதில் இருந்து அவர்களை காப்பாது, அது மட்டுமல்லாது இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் மூலமாக பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்ற எண்ணங்களை தனது நடைபயணத்தின் நோக்கமாக கொண்டு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை தனது பயணத்தினை தொடங்கியுள்ளார்.

கடந்த 15ஆம்தேதி சிருஷ்டி கன்னியாகுமரியில் நடைபயணத்தினை தொடங்கினார். தினந்தோறும் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை 260நாள்களில் 3800 கிலோ மீட்டர் தூரம் தனது நடைபயணத்தினை மேற்கொண்டுள்ளார். தமிழகம் வழியாக கர்நாடாக, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியபிரேதசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் வழியாக ஸ்ரீநகரை அடைகிறார். தனது நடைபயணத்தின் போது பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை சந்தித்து தனது எண்ணங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து, தனது பயணத்தின் இறுதியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத்கோவித்தை சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.

சிருஷ்டி இந்த லட்சிய பயணத்திற்காக அவரது நண்பர்கள 10 பேர் ஆதரவு தெரிவித்து, அவருக்கு ஊக்கமும், உற்சகமும் கொடுக்கும் வகையில் உடன் வருகின்றனர். சிருஷ்டியின் லட்சிய பயணம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை..