கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் நர்ஸ் தற்கொலை – மருத்துவர் மீது குற்றச்சாட்டு

கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மணி, இவர் பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமாலா, இவர்களுக்கு பூரணி, தாட்சாயிணி (எ) அம்மு(20). பூரணி தனியார் கார்மெண்ட்ஸ்சில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தான் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தாட்சாயிணி 12ம்வகுப்பு வரை படித்த பின்பு, தனியார் நர்சிங் இன்ஸ்டியூசினில் சேர்ந்த 1வருட சான்றிதழ் நர்சிங் பயின்றுள்ளார்.பின்னர் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 1வார காலமாக ரொம்ப சேர்வடைந்து காணப்பட்ட தாட்சாயிணி நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு போய்விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் தாட்சாயிணி மயக்கமடைந்த, அவரது வாயில் இருந்து நுரைவந்ததை பார்த்த அவரது தாய் மணிமாலா மற்றும் அவரது சகோதிரி பூரணி, உறவினர்கள் தாட்சாயிணியை அவரது பணிபுரிந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை உள்ளே கூட விடமால் இங்கு பார்க்க முடியாது, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்ல சொல்லியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தாட்சாயிணி உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அதன் பிறகு தான் தாட்சாயிணி விஷம் அருந்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் தாட்சாயிணி அங்கு சிகிச்சை பலன் இல்லமால் உயிர் இழந்துள்ளார்.

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது தாட்சாயிணி, தனது,தாய் மற்றும் சகோதிரியிடம் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் மருத்துவமனை கொடுத்த தொந்தரவு தான் காரணம் என்று கூறியதாக கூறப்படுகிறது. தங்கள் மகளின் மரணத்திற்கு மருத்துவர் தான் காரணம், அவர் மீதும், மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாட்சாயிணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.