பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் சரவணா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர்ந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த எம்.ஆர்.சரவணன் ” விஜய் டிவியில் ஒளிபரப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெண்களும் குழந்தைகளும் பார்க்க முடியாதளவுக்கு உள்ளது. தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் அந்த நிகழ்ச்சியில் பறிக்கப்படுகிறது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா மீதுள்ள மதிப்பு, மரியாதை குறைந்துள்ளது.
அவரது நடவடிக்கைகள் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை வெறுப்படையைச் செய்கிறது. இதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை இணைச் செயலாளர், தமிழக அரசு, டிஜி.பி, விஜய் டிவி நிர்வாக இயக்குநர், நடிகர் கமல் ஆகிய ஐந்து பேரை எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளோம்” என்றார்.