முதல்வர் மற்றும் துணை முதல்வர் பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு அஞ்சலி

தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுவ படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்