கதாநாயகன் திரைவிமர்சனம்

நாயகன் விஷ்ணு விஷால் பயந்த சுபாவத்துடன் வலம் வருகிறார் அவருக்கு அரசு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. பணியில் சேரும் சமயத்தில் விஷ்ணுவின் பாலிய பள்ளித் தோழனான சூரியை சந்திக்கிறார். அதுமுதல் இருவரும் இணைபிரியாமல் நட்புடன் பழகி வருகின்றனர்.   பொதுவாக எந்த பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்ளாத விஷ்ணு, சாலையை கடக்கக் கூட மற்றவர் துணையை தேடுபவர்.  ஒருநாள் சாலையை கடக்கும் போது வண்டியில் வரும் நாயகி கேத்தரின் தெரசாவை பார்க்கிறார்.  பார்த்த முதல் சந்திப்பிலேயே கேத்தரின் மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது.

இந்நிலையில், விஷ்ணுவை பார்க்கும் கேத்தரின் அவரை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் விடுகிறார். இதனால் மகிழ்ச்சியடையும் விஷ்ணு, சூரியிடம் அவளை காதலிப்பதாக கூறுகிறார். இந்நிலையில், அரசு வேலைக்கு தேர்வாகி இருக்கும் கேத்தரின் தெரசாவின் விண்ணப்பமும் இருக்கிறது.  அதைப் பார்த்து குஷியாகும் விஷ்ணு விஷால், அவளது வீட்டு முகவரியை பார்க்க, அது அவரது வீட்டிற்கு, அடுத்த வீடு என்பது தெரிய வருகிறது. இயைதடுத்து தனது குடும்பத்தோடு பெண் கேட்க செல்வது போல சரிபார்ப்புக்காக செல்கிறார்.

இதையடுத்து கேத்தரினிடம் அவரது காதலையும் தெரிவிக்கிறார். கேத்தரின் அவளது பெற்றோரிடம் பேசச் சொல்ல, அவரது அப்பாவிடம் கேத்தரினை திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறார்.  ஆனால் விஷ்ணுவுக்கு, கேத்தரினை திருமணம் செய்து வைக்க அவளது தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட சில பிரச்சனைகளில் விஷ்ணு பயந்து ஓடியதால் அவருக்கு கேத்தரினை திருமணம் செய்து வைக்க முடியாது. தனது மகளை ஒரு ஆம்பளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறிவிடுகிறார்.

இந்நிலையில், கேத்தரினும் தன்னை காதலிக்கிறாள் என்பதும் விஷ்ணுவுக்கு தெரிய வருகிறது.  இதனால் அவமானத்துக்கு உள்ளாகும் விஷ்ணு விஷால் அடுத்ததாக என்ன செய்தார்? அவர்களது திருமணத்திற்கு கேத்தரின் தெரசாவின் தந்தை அனுமதி தந்தாரா? கேத்தரின் தெரசாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்