காதல் கசக்குதய்யா – திரைவிமர்சனம்

Vijay antony Pitchaikkaran releaseon 4th March 2016

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாயும் விபத்து ஒன்றில் சிக்கி அதில் அவரது தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்று கொண்டே, கோமாவில் இருக்கும் தாயையும் துருவா பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார். அவரது அம்மாவின் சிகிச்சைக்கு உண்டான செலவை அரசே ஏற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறது.  வெகு நாட்களாக சிகிச்சை பெற்றும் துருவாவின் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. துருவாவின் தாய் மாமா அவரது அம்மாவை கருணை கொலை செய்யச் சொல்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் துருவா, தனது தாய் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்கிறார்.  

இந்நிலையில், சிகரெட் பிடிப்பதையே பொழுதுபோக்காக கொண்ட துருவாவை, 12ஆம் வகுப்பு மாணவியான நாயகி வெண்பா பார்க்கிறார். பார்த்த உடனே அவர் துருவா மீது காதல் வருகிறது. அவளது தோழிக்கு ஆண் நண்பர்கள் இருந்தும், தனக்கு யாரும் இல்லையே என்ற கவலையில் இருக்கும் வெண்பா, துருவாவை பின்தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஒருநாள் துருவாவின் போன் நம்பரையும் திருடி போன் செய்து அவனை காதலிப்பதாக சொல்லி நேரில் சந்திக்க வரச் சொல்கிறாள்.  தன்னை ஒருபெண் காதலிக்கிறாளா என்ற ஆனந்தத்தில் அவளை பார்க்க சென்ற துருவா நாயகியை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார்.

6 அடி உயரமுடைய தனக்கு குள்ளமான பெண்ணா என்று மனதில் நினைக்கும் துருவா வெண்பாவை தவிர்க்க நினைக்கிறார். ஆனால் நாயகி விடாப்பிடியாக துருவாவை துரத்தி காதலித்து வருவதால், ஒரு கட்டத்தில் துருவாவும், வெண்பாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் வெண்பாவை ஒருதலையாக காதலித்து வரும் பள்ளி மாணவன் ஒருவர், வெண்பா, துருவாவுடன் சேர்ந்து ஊர்சுற்றுவதாக கூறுகிறார். இந்நிலையில், வெண்பாவுடன் தனது வீட்டில் இருக்கும் துருவாவை பார்த்த சார்லி, வெண்பாவை அடித்து வீட்டிற்கு இழுத்து செல்கிறார். இதனால் ஏற்பட்ட மனவேதனை மற்றும் அவமானத்தால் மனம் நொந்து போகிறார் துருவா. ஆனால், வெண்பா எப்போதும் துருவாவையே நினைத்து உருகுகிறாள். இறுதியில் கோமாவில் இருக்கும் துருவாவின் தாய் மீண்டு வந்தாரா? துருவா, வெண்பாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்