ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு தடை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். இதற்காக இன்று தங்களது போராட்டத்தை தொடங்கினர். ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறுகையில், “நிர்வாகம், மருத்துவம், கல்வி மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேறு வழிகளை கையாளலாம். எனவே வேலை நிறுத்தத்தை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது” என கூறினார். 
எனவே, பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதால் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.