நாளைமுதல் (6ந்தேதி) வாகன ஓட்டிகள் ஓரிஜினல் லைசென்ஸ், இன்சூரன்ஸ், மற்றும் ஆர்.சி.புக் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வாபஸ் பெற வலியுறுத்தியும், படித்தவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் என்ற சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,டாடா ஏஸ், மினிவேன்களில் ஆடு,மாடு ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும், ஓட்டுநர் அனைவருக்கும் இலவச வீடு வழங்க வேண்டும், விவசாயம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் முன்பு அனைத்து வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திரளான வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.