கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 146வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி.கொள்ளு பேத்தியும், தலைமை ஆசிரியருமான செல்வி, வ.உ.சி.திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓட்டப்பிடராத்தில் உள்ள வ.உ.சி.இல்லத்தில் அவரது வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம், அதனை அரசு நிறைவேற்றியது, ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு அரசுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். வ.உ.சி. சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல நல்ல வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். எனவே அவரது பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என அரசினை கேட்டுக்கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் திரைப்படக்குழு தணிக்கையாளரும், வழக்கறிருமான முருகானந்தம், கவிலாஸ்போஸ்,மோனிஷா, வழக்கறிஞர் குத்தாலிங்கம், மாரிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.