அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டத்திற்குபின் நல்ல தீர்வு ஏற்படும் – அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ

Upcoming Actor VIPIN VISWANATH

கோவில்பட்டி வ.வு.சி.அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.25லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதன் பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு டாக்டர். வீரப்பன் தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் 12 தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குடி கூட்டத்திற்குபின் நல்ல தீர்வு ஏற்படும். அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும், இரண்டு அணிகளும் இணைந்ததால் விரைவில் இரட்டை இலை சின்னத்தை பெறுவோம். வரும் 7ந்தேதி அரசு ஆசிரியர்கள் மேற்கொள்ள இருக்கும் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், கிராம புற மாணவர்கள் நீட்தேர்வினால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதனை உணர்ந்து தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வினை எதிர்த்து வந்தார்.

அவர் வழியல் செயல்படும் இந்த அரசும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பல்வேறு முயற்சிகள் எடுத்தது. ஒரு ஆண்டு மட்டுமாவது விலக்கு பெற அவசர சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்திரவினை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. இருப்பினும் நமது தமிழக மாணவர்கள் நீட்தேர்வினை எதிர்க்கொண்டு வெற்றிபெறும் வண்ணம் இந்த ஆண்டு புதிய பாடதிட்டங்க்கள் அறிமுக படுத்தவுள்ளதாகம், இதற்காக தனியாக செயலாளரும் நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வில் மற்ற மாநில மாணவர்களை விட தமிழக மாணவர்கள் சிறப்பாக செயல்படும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(பொ) சின்னராசு, பொதுப்பணித்துறை உதவி கோட்டப்பொறியாளர் முத்துலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், கோவில்பட்டி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், வ.உ.சி தலைமையாசிரியர் முனியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.