குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதி இந்திரா காலனி. 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யபடவில்லை என்று கூறப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தரவேண்டும், இந்த வழியாக செல்லும் சீவலப்பேரி குடிநீரி திட்ட குழாய்களில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பலமுறை மனுகொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காலிகுடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மேலும் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பரமராஜ், தாலூகா செயலாளர் சேதுராமலிங்கம்,துணை செயலாளர் பாபு, சரோஜா, முனியசாமி, செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.