விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக புகார் – பேச்சு வார்த்தை தொடர்ந்து சிலைகளை கரைக்க சம்மதம்

கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 21க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளை விஜர்சனம் செய்வதற்கான அனைத்து சிலைகளையும் ஒருங்கிணைந்து கொண்டு செல்லும் போது புதுக்கிராமம் முகம்மர்சாலியபுரத்தில்; தீடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் தெருவிளக்குகளை வேண்டுமென்றே அணைத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி செண்பகவல்லியம்மன் கோவில்முன்பு போராட்டத்தி;ல் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்இணைப்பினை துண்டித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தனர்.

அவர்கள் கொண்டு வந்துள்ள சிலைகள் அணைத்தும் செண்பகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அனிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மின்இணைப்பினை துண்டித்தவர்கள்  மீதும், இந்து முன்னணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டதில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் சிலைகளை கரைக்க ஒப்புக்கொண்டனர். பேச்சுவார்த்தையில் டி.எஸ்.பி.முருகவேல், ஆய்வாளர்கள் ராஜேஸ், பவுல்ராஜ், இந்து முன்னணி நகர செயலாளர் சுதாகரன், பாரதிய ஜனதாகட்சி மாவட்ட செயலளர் சிவந்தி.நாரயணன், லெட்சுமணக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.