தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் வழங்கிய கடிதம் குறித்து ஆளுநர் ஆராய்ந்து முடிவு எடுப்பார் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிந்திருந்த அணிகள் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அதே நேரம் அதிமுகவில் தற்போது நடக்கும் குழப்பங்கள் ஆட்சிக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.