ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவியேற்பு

பின்னர் வெகு நாளாக இரு அணிகளின் இணைப்புகான பேச்சுவார்த்தை நடந்தது கடந்த சில தினங்களாக அந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது இந்நிலையில் இன்று நடைப்பெற்ற நீண்ட நேர ஆலோசணைக்கு பிறகு அதிமுகவின் இரு அணியினரும் கட்சி  தலைமை அலுவலகத்தில் இணைந்தனர். தலைமை அலுவகத்தில் இணைப்பிற்கான கூட்டம் நடைப்பெற்று வருகிறது அதில்  ஓ.பன்னீர் செல்வம்,  முதல்வர் பழனிசாமி மற்றும் தலைமை நிர்வாகிகள் பேசினர்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, கட்சியை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளார் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தனக்கும் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளார் பதவி கே.பி முனுசாமிக்கும் அறிவித்தார். மேலும்  அமைச்சரவையை பொறுத்த வரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணைமுதலமைசர் பதவி மற்றும் நிதி இலாக்கா ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.