அணிகள் இணைப்பில் மீண்டும் சிக்கல்

இரு அணிகளும் இன்று இணையும் என்று பெரும் ஆவலோடு தொண்டர்கள் மற்றும் தமிழகமே எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதிவிலிருந்து சசிகலாவை நீக்கும் முடிவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தலைமை கழக வர முடியும் என்று ஓ.பி.எஸ்.தரப்பில் நிபந்தனை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலாவை நீக்கும் முடிவில் தயக்கம் காட்டி வருவதாகவும் ஓ.பி.எஸ். தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணிகள் இணைவது குறித்து இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஓ.பி.எஸ்.தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருப்பது அணிகள் இன்று இணையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அணிகள் இணைவது நிச்சயம் என்றும் சொல்லப்படுகிறது.