7 வயது சிறுமி பூங்காவை மீட்க மோடிக்கு எழுதிய கடிதம்

Yellow Festival Short Film

ரோகினி செக்டர் பகுதியை சேர்ந்தவர் நவ்யா (7) எனும் சிறுமி. இவரது வீட்டிற்கு அருகே உள்ள குழந்தைகள் பூங்காவை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட டெல்லி மாநகராட்சி முடிவு செய்தது. மேலும் அந்த இடத்தில் கட்டுமான பணிகளையும் ஆரம்பித்து விட்டது.  இந்நிலையில், டெல்லி மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நவ்யா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த இரண்டு பக்க கடிதத்தில் நவ்யா, அன்புள்ள மோடி அங்கிள், விளையாட்டு பூங்காக்களுக்கு இங்கு இடமில்லை என்றால் ஒலிம்பிக்ஸில் விளையாடி எப்படி பதக்கம் வெல்வது? என கேள்வி எழுப்பி உள்ளாள். மேலும் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி பூங்காவை தனக்கு பரிசாக அளிக்கும் படியும் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளாள்.

வழக்கறிஞரான நவ்யாவின் தந்தை பூங்கா விவகாரம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.