தனது கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரை, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தனது தள்ளாத வயதிலும் பொதுமக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்தக்கொண்டு போராடி வருகிறார். அவரை ரோல் மாடலாக வைத்து பல படங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் விஜய் விக்ரம் என்பவர் டிராபிக் ராமசாமி கதையை முழுநீள திரைப்படமாக எடுக்கப்போவதாகவும், அதில் எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இதை பத்திரிகைகள் வாயிலாக அறிந்த டிராபிக் ராமசாமி, திடீரென எஸ்.ஏ.சந்திரசேகரின் அலுவலகத்துக்கு வந்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து, தனது கதையில் நடிப்பதற்காக வாழ்த்து தெரிவித்ததோடு, படக் குழுவினருடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
பிறகு, இயக்குனர் விஜய் விக்ரம் எழுதியுள்ள கதையைக் கேட்டு,தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் சிலவற்றையும் எடுத்து சொன்னதோடு,தனது தனிப்பட்ட மேனரிஷங்கள்,பழக்க வழக்கங்களையும் எடுத்துக் கூறினார் டிராபிக் ராமசாமி.