சென்னை சி-1காவல் நிலையத்தில் சுதந்திரதின கொண்டாடம்

71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சி-1காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் எம்.ரவி ஏற்பாட்டில் பூக்கடை, என்.எஸ்.போஸ் ரோடு பகுதி சாலையோரத்தில் ஏழை குடும்பங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் சரக வளாகத்தில் துணை ஆணையர் எஸ்.செல்வக்குமார் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து 50-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஏழை பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி (பை) பேக், நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், போன்ற கருவிகள் உள்ளடங்கிய ஜாமன்றி பாக்ஸ், மற்றும் சிற்றுண்டி பாக்ஸ், தண்ணீர் பாட்டில், அடங்கிய கிட் பாக்ஸ்களை வழங்கினார். இதில் சரக காவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். மக்கள் பணிக்காக தங்களை அற்பணித்த அதிகாரிகள் ஏழை குழந்தைகளை கண்டறிந்து தங்கள் காவல் பணியுடன் சமூக பணியையும் இனைத்துக் கொண்டதின் மூலம் சுதந்திர இந்தியாவின் பாராட்டை பெற்றதாக இருந்தது.