17ஆம் தேதி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

சிதம்பரத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், “கொள்ளிடம் வெள்ளாற்றில் தடுப்பனை கட்ட வேண்டும், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.