உங்கமகள் சினிமா உலகில் கால்பதிப்பாரா? கஜோல் பதில்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தார் கஜோல் இவர் தமிழில் மின்சார கனவு என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தனுஷின் விஐபி-2 படத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் தனது மகள் நைசாவை சினிமா உலகினருக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்போது கஜோலிடம் உங்கமகள் சினிமா உலகில் கால்பதிப்பாரா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், எனது மகள் சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். அவளுக்கு சமையல் என்றால் மிகவும் விருப்பம். வீட்டில் பலவகையான சமையல்களை செய்து அசத்துகிறாள். சினிமாவின் ஆர்வம் இல்லை. சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும் என்பதே அவளது விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.