வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.20 லட்சம் நிதியுதவி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் கடந்த 12ஆம் தேதி வீரமரணம் அடைந்திருந்தனர். உயிரிழந்தவர்களில், இளையராஜா என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இந்த நிலையில், சிவகங்கை இளையான்குடியை சேர்ந்த பி.இளையராஜா குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார். இந்த நிதியுதவியை, காலதாமதமின்றி உடனடியாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.