பிரபல கன்னட நடிகர் பாஜகவில் இணைவதாக தகவல்

கன்னட சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் உபேந்திரா. இவர் தமிழில், விஷால் – நயன்தாரா நடித்த ’சத்யம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் உபேந்திரா, அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தொடர்ந்து அதை அவர் மறுத்து வந்தார்.  இந்நிலையில், அவர் அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இப்போது அவர், பாஜக கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.