இலங்கை டெஸ்ட், 329 ரன்கள் இந்தியா, தவான் சதம்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று பல்லேகேலேயில் துவங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய துவக்க வீரர்கள் தவான்- ராகுல் அதிரடியாக விளையாடினர். இதில், தவான் தனது 6-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ராகுல் 85 ரன்கள் குவித்து அவுட்டானார். 

இதனை அடுத்து, களத்திற்கு வந்த கேப்டன் கோலி 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதற்கு பின், சாஹா- பாண்ட்யா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து, 329 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை தரப்பில், புஷ்பகுமாரா (3), சண்டகன் (2) விக்கெட்களை கைப்பற்றினர். சாஹா (13), பாண்ட்யா (1) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.