சிதம்பரத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்

காவல்துறையை கண்டித்து சிதம்பரத்தில் இருந்து அரசு பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பேருந்துகள் மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த விபத்து குறித்து ஓட்டுநரின் புகாரை போலீசார் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் பேருந்துகளை இயக்கமால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.