அதிமுக அடிபணிவதற்கு பா.ஜ.க.தான் காரணம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் உள்ளிட்ட அணைத்து விஷயங்களிலும் அதிமுக அரசு அடிபணிவதற்கு பா.ஜ.க தான் காரணம். அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று நான் கூறியதற்கு முதல்வர் சொல்லியிருக்கிறார் நாங்கள் ஏற்கனவே நம்பிக்கையிலா தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்று. நாங்கள் ஏற்கனவே கொண்டுவந்தது சபாநாயகர் மீது தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தோம்.

அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது ஆளுநரின் உத்தரவு பெயரில் நடைபெற்றது. தமிழக அரசு மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவில்லை இது கூட தெரியாத முதல்வர் தமிழகத்தில் இருக்கிறார் என்பது வேதனையான விஷயம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது திமுகவின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படும் என்று கூறினார்.