நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அளித்த பேட்டியில், நடிகர் திலகம் சிவாஜி சிலையை மெரினாவில் மீண்டும் வைக்கவேண்டும். சிவாஜி சிலை அருகே எத்தனை சாலை விபத்துக்கள் ஏற்பட்டது என்ற புள்ளி விவரம் யாரிடம் இல்லை. மேலும் கண்ணகி சிலை எடுக்க எந்த காரணமோ அதே காரணம் தான் சிவாஜி சிலை அகற்ற பட்டத்திலும் உள்ளது. சிவாஜி சிலை அகற்றப்பட்டது சிவாஜிக்கு அவமானம் இல்லை தமிழர்களுக்குத்தான் அவமானம். மெரினாவில் வேறொரு இடத்தில் மீண்டும் சிவாஜி சிலையை வைக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கூறினார்.