சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி, அங்குள்ள ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதனால் அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பாலியல் குற்றங்கள் தற்போது பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பதவிக்கு ஏற்ற கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.