டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம் கடந்த 1972 தொடங்கி 15 ஆண்டுகள் இயக்கத்தின் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவரது மறைவிற்கு பிறகு கழகம் இரண்டு பட்டாலும் ஜெயலலிதா அவர்கள் கழகத்தை ஒன்றிணைத்து 30 ஆண்டுகள் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார்கள். இன்னும் 100 ஆண்டுகள் ஜெயலலிதா சொன்னது போல் இந்த இயக்கம் தலை சிறந்த இயக்கமாக செயல்படும். தமிழகத்தில் இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடித்த அளவிற்கு தொடர்ந்து பாடுபடுவேன்
இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற சகோதரர்கள் தங்கள் சுயலாபத்திற்காகவோ அல்லது பயத்திலோ எதையாவது சொல்லுவார்கள் அதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் நிச்சயம் கூட்டம் நடைபெறும். எதிரிகளின் செயலால் சில காலம் கட்சியில் இல்லாமல் இருந்தேன். 5 ஆண்டுகள் ஆட்சி தொடருமா என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்களை கேட்கவேண்டும். திவாகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து சசிகலா தான் முடிவுசெய்வார். நீட் தொடர்பாக விவகாரத்தில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னால் முடிந்த முயற்சிகளை நூறு சதவிகிதம் செய்துவருகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டாலின் கொண்டுவரும் போது பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.