நாட்டின் 15 வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக பதிவியேற்புக்கு முன்பு மகாத்மாகாந்தி நினைவிடத்திற்கு சென்று வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.